பென்னாகரம், டிச.25: உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இயேசு குழந்தையாக பிறந்ததை அறிவிக்கும் விதமாக, கத்தோலிக்க திருச்சபை மூலம் பல்வேறு இடங்களில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி வீடு வீடாக சென்று பிரார்த்தனை செய்யப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக பென்னாகரம் அடுத்த, ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில், புனித அன்னை கத்தோலிக்க திருச்சபையில் இயேசு கிறிஸ்து குழந்தையாக பிறப்பதை அறிவிக்கும் விதமாக பங்குத்தந்தை மரிய ஜோசப் தலைமையில், ஒன்றிணைந்து அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை, கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தை இயேசுவின் சுரூபத்தை வைத்து கொண்டாடி பெண்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
