மத்திகிரி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

ஓசூர், ஜன.21:ஓசூர் அருகே மத்திகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ₹75 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறை கட்டிடங்கள், ஒரு ஆய்வு கூடம் ஆகியவை தனியார் நிறுவனம் சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பிடிஏ தலைவரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான வாசுதேவன் தலைமை வகித்தார். தனியார் நிறுவன இயக்குநர் செந்தில்நாதன் வகுப்பறைகளை திறந்து வைத்தார். ரிச்சர்டு டிசோசா, ஜெய் அருள்முருகன், பொது மேலாளர் விஜயகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். இதில் ரோட்டரி சங்க துணை ஆளுனர் ஆனந்தகுமார், ஆடிட்டர் குத்தாலிங்கம், பிடிஏ பொருளாளர் சாக்கப்பா, சந்திரன், நாராயணசாமி, ரவிக்குமார், நாகராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>