×

ஆசிரியர்களுக்கு கொரோனா வழிகாட்டு முறை பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரியில் ஆசிரியர்களுக்கு கொரோனா தொடர்பான நிலையான வழிகாட்டு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டார வளமையம் சார்பில், மாவட்டக் கல்வி அலுவலர் பாலமுரளியின் அறிவுரையின்படி, சுகாதாரத்துறை மூலம், 10 மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமை ஆசிரியர் சேரலாதன் தலைமை வகித்தார். இப்பயிற்சியில், பள்ளிகளில் கொரோனா தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பயிற்சியை ஒன்றிய மருத்துவ அலுவலர் டாக்டர் சுசித்ரா, ஒன்றிய நல மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் வழங்கினர். அதில், மாணவ, மாணவியருக்கு வைட்டமின் மாத்திரைகள் அளிப்பது, தெர்மல் ஸ்கேன் எவ்வாறு பயன்படுத்துவது, பல்ஸ் ஆக்ஸ்மீட்டர் பயன்படுத்துதல் குறித்தும், விளக்கம் அளித்தனர். இப்பயிற்சியில், 67 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கோதண்டபாணி மற்றும் நல ஆய்வாளர் கலைவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Corona ,teachers ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...