தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

தர்மபுரி, ஜன.21:தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடந்தது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி முன்னிலை வகித்தார். விழாவில் முதலாமாண்டு மாணவ- மாணவிகளுக்கு 2ம் ஆண்டு மற்றும் சீனியர் மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள், டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரியின் விதிமுறைகள் குறித்து டாக்டர்கள் விளக்கி கூறினர். இதில் துணை முதல்வர் முருகன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரசேகரன், மாணவ ஆலோசகர் டாக்டர் காந்தி, மாணவர்கள் விடுதி வார்டன் டாக்டர் இளவரசன், மாணவிகள் விடுதி வார்டன் டாக்டர் அனிதா தாமரைச்செல்வி மற்றும் பேராசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், டாக்டர்கள், பெற்றோர்கள், சீனியர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>