திருவள்ளூர் : ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் ராஜூ பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதமும் வழங்கி திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜூலை மாதம் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்மநபர் ஒருவரால் தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 5 மாதங்கள் நடைபெற்ற இந்த விழாவில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ராஜூ பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
