இருதரப்பு மோதலில் 5பேர் கைது

கடத்தூர், ஜன.21: கடத்தூர் அருகே ராமியனஅள்ளி ஏரி கரையோரத்தில் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை சேர்ந்த 4பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு தரப்பினர், இப்பகுதியில் மது அருந்தக் கூடாது என கூறியுள்ளார். அதில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒருதரப்பை சேர்ந்த இளைஞர்கள், தங்களது ஊருக்கு சென்று தங்களை தாக்க வருவதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கும்பல், ராமியனஅள்ளி காலனி பகுதிக்கு சென்று கண்ணில் பட்ட நபர்களை, கட்டையால் சரமாரியாக தாக்கியதில், 8 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக கோபிநாதம்பட்டி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் ராமியனஅள்ளியை சேர்ந்த முருகன் மகன் அலெக்ஸ்பாண்டியன்(23), முருகன் மகன் மருதுபாண்டியன்(27), செல்வம் மகன் சேகர்(31), முருகேசன் மகன் ரஞ்சித்(23), கணேசன் மகன் ராமன்(24) உள்ளிட்ட 5பேரை போலீசார் கைது செய்து, பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் கிளை சிறையில் நேற்று அடைத்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: