புதிதாக 72,447 பேர் சேர்ப்பு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் தண்ணீர் கலந்து மதுவிற்ற ரவுடி கைது

திருச்சி, ஜன. 21:  திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் குவார்ட்டர் மதுவை வாங்கி, அதில் பாதிக்கு பாதி தண்ணீர் ஊற்றி விற்கப்படுவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எடமலைப்பட்டிபுதூர் முருகன் கோயில் அருகே கிராப்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்த பிரபல ரவுடி செந்தில்முருகன் (30) என்பவர் மதுபாட்டில்கள் வாங்கி அதில் பாதிக்குபாதி தண்ணீர் ஊற்றி விற்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 35லிட்டர் மது மற்றும் கலப்பதற்காக வைத்திருந்த 35 லிட்டர் தண்ணீர் கேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மணப்பாறை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். கைது செய்யப்பட்ட செந்தில்முருகன் மீது எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் 6க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>