லேத் பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியைகாட்டி பணம் பறித்தவர் கைது

திருச்சி, ஜன.21: திருச்சியில் லேத்பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியை காட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி அாியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்தவர் அருண் (19), லேத்பட்டறை மெக்கானிக். இவர் நேற்றுமுன்தினம் அரியமங்கலம் மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, உக்கடை காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த அப்பாஸ் (20) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் அப்பாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>