சென்னை: கூட்டணி குறித்து மிக விரைவில் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பாஜக இந்தியாவையே ஆண்டாலும் தமிழ்நாட்டில் எடப்பாடிதான் தே.ஜ.கூட்டணிக்கு தலைவர். தவெகவுடன் கூட்டணி கிடையாது; அது நேற்று தொடங்கப்பட்ட கட்சி என வைகைச் செல்வன் கூறினார்.
