வர்த்தக சங்கம் எச்சரிக்கை முத்துப்பேட்டையில் 8 இடங்களில் மறியல்

திருத்துறைப்பூண்டி, ஜன.21: கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் உடனடியாக வழங்கிட கோாி இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் முத்துப்பேட்டையில் ஒன்றிய செயலாளா் முருகையன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத், நகர செயலாளர் மார்க்ஸ், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவசந்திரன், ரவி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல முத்துப்பேட்டை ஒன்றியத்தில் நாச்சிக்குளம், எடையூர், இடும்பாவனம், பாண்டி ரயிலடி, பாண்டி சத்திரம், கள்ளிக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>