நாமக்கல்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழி, வாத்து, காடைகள் தீடீரென செத்துள்ளன. அவற்றின் ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் H1, N1 பறவை காய்ச்சல் இருந்தது உறுதியாகியுள்ளது.
