×

வைத்திலிங்கம் எம்.பி வழங்கினார் தஞ்சை பள்ளியக்கிரஹாரத்தில் சாலையில் கிளம்பும் புழுதியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

தஞ்சை, ஜன.21: மத்திய அரசு இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சை நகரமும் ஒன்று. இதற்காக சுமார் ரூ.1289 கோடி ஒதுக்கியது. இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டியாகும் நகரப் பகுதியில் குடிநீர், வடிகால், சாலைகளில் தண்ணீர் தேங்காமல், ரோடு வசதிகள், சரித்திர புகழ்வாய்ந்த இடங்கள், அரண்மனை, சரஸ்வதி மகால் மற்றும் புராதன கட்டிடங்கள் இருப்பதால் அவைகளை பழமை மாறாமல், நவீன முறையில் மாற்றி முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றுவது தான் ஸ்மார்ட் சிட்டியாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியக்கிரஹாரம் பகுதி சாலையில், சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் ராட்சத குழாய்கள் அமைத்தனர். ஆனால் பள்ளங்களை சரிவர மூடாததாலும், ஜல்லிகளையும், சிமெண்ட துகல்களையும் கொட்டினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால், சாலைகள் குண்டு குழியுமாக மாறியது. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் ஜல்லிகளையும், ஜல்லி துகள்களையும் ஓப்புக்காக போட்டு நிரவினர். அச்சாலையில் அதிகமான வாகன போக்குவரத்து காரணமாக, ஜல்லி துகள்கள் காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், அங்குள்ள உணவு விடுதிகள், டீக்கடைகள், குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ளவர்கள் தினந்தோறும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், பள்ளியக்கிரஹாரம் சாலை முழுவதும் புழுதிகள் பறந்து, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ளது. இதனால் விபத்துகளும் நடக்க அதிக வாய்ப்புள்ளது. வீடுகளில் உள்ள உணவு பண்டங்களில் புழுதி படர்ந்து விடுவதால், அப்பகுதி மக்கள் தினந்தோறும் வேதனைக்குள்ளாகி ருகின்றனர். இதுபோன்ற நிலையால், குழந்தைகள், முதியவர்கள், சுவாச பிரச்சனையால் கஷ்டத்துடன் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் பேருந்துகள் வேகமாக செல்லும்போது, புழுதி பறந்து புகை மூட்டம் கிளம்புவதால் வாகனங்கள் செல்வது தெரியாமல் மோதிக்கொள்கிறனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகாரளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். தஞ்சை-கும்பகோணம்-சென்னை செல்லும் பிரதானமான சாலையாக இருக்கும் நிலையில், அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை கண்டு கொள்ளாமல் சென்று வருவது, வேதனையான விஷயமாகும்.

Tags : Vaithilingam ,Motorists ,school ,Tanjore ,road ,
× RELATED கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்காத...