ஒரத்தநாட்டில் தமிழ்பால் நிறுவன புதிய விநியோக மையம் திறப்பு

ஒரத்தநாடு, ஜன.21: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா, பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை சுப்ரமணியபுரத்தில், தமிழகத்தில் முன்னணி பால் நிறுவனமான தமிழ்பால் நிறுவன புதிய விநியோக மையம் திறப்பு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளரான அந்நிறுவன விற்பனை மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தஞ்சை வெற்றிவேல் சுவாமி புதிய விநியோக மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்துமதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, முதல் விற்பனையை துவங்கி வைத்தார். விழாவில் தமிழ்பால் நிறுவன விற்பனை அதிகாரிகள் பங்கேற்றனர். விநியோக மைய விநியோகஸ்தரான ஒரத்தநாடு கிருஷ்ணாஏஜென்சீஸ் இளமாறன் அனைவரையும் வரவேற்றார். நிறுவனத்தின் விற்பனை மேலாளர் சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார், அப்போது இளைஞர்கள், வாழ்வில் முன்னேறுவதற்கும், பால் விற்பனையாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து, வரும் காலங்களில் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலுள்ள அனைத்து தாலுகா வாரியாக தமிழ் பால் விநியோக மையங்கள் புதிதாக திறக்கப்பட இருப்பதாக கூறினார்.

Related Stories:

>