திருவிடைமருதூர் சூரியனார் கோயிலில் ரதசப்தமி பெருவிழா

கும்பகோணம், ஜன.21: கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் சூரியனார் கோயிலில் உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரிய பெருமான் கோயில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு என்று பிரத்தியேகமாக அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் ரதசப்தமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் உற்சவர் உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரிய பெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பிரகாரவீதி உலா நடந்தது. விழாவின் 7ம் நாள் திருவிழாவான திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் சீர்வரிசை எடுத்து வருதல், ஆட்டம் பாட்டத்துடன் மாலை மாற்றுதல் வைபவம், ஊஞ்சல் உற்சவம் என நடந்தது. சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. சூரிய பெருமான் திருக்கல்யாணத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories:

>