53,124 பேர் புதிதாக சேர்ப்பு கொத்தமங்கலம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராமசபை கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட் டம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி அவைத் தலைவர் மூத்த முன்னோடி ராஜன் தலைமை வகித்தார். ஆலங்குடி எம்எல்ஏ எம்எல்ஏ மெய்யநாதன், ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொத்தமங்கலம் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.  கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ மெய்யநாதன் மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Stories:

>