புதுக்கோட்டை அருகே பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் செயின் திருட்டு

புதுக்கோட்டை, ஜன. 21: புதுக்கோட்டை அருகே பஸ்சின் சென்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியை சேர்ந்தவர் சுதா (40). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டைக்கு வந்து பஸ் நிலையத்திலிருந்து ஆலங்குடிக்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பேராங்குளம் அருகே பஸ் சென்றபோது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து கணேஷ்நகர் போலீசில் சுதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பெண்ணிடம் செயின் பறித்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>