அமெரிக்காவின் புதிய அதிபர், துணை அதிபர் உருவங்களை தர்பூசணியில் செதுக்கி அசத்தல் கூடலூர் கலைஞர் மற்றொரு முயற்சி

கூடலூர், ஜன. 21: தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் இளஞ்செழியன். காய்கனி சிற்ப கலைஞரான இவர் திருமண விழாவில் மணமக்கள் படங்கள், பிறந்தநாட்களில் தேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் படங்களை தர்பூசணியில் உருவாக்குவார். இதுபோல் இதுவரை 1000க்கும் மேற்பட்டோரின் படங்களை தர்பூசணியில் உருவாக்கி அசத்தியுள்ளார். தற்போது அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்கவிருக்கும் ஜோ பைடன், துணை அதிபராக பதவி ஏற்கவிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோரின் உருவங்களை தர்பூசணியில் தத்ரூபமாக சிற்பமாக செதுக்கி உள்ளார். இதனை இப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

Related Stories:

>