தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தா.பழூர் ஜன: 21:அரியலூர் மாவட்டம் தா. பழூர் முதன்மை அரசு சமுதாய நல மையத்தில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் தா.பழூர் வட்டார மருத்துவ அலுவலர் புகழேந்தி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஓட்டுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது நேற்று வரை 85 முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

>