×

2 தொகுதிகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியீடு அரியலூர் மாவட்டத்தில் 5.30 லட்சம் வாக்காளர்கள்

அரியலூர், ஜன.21: அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ரத்னா நேற்று வெளியிட்டார். அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ரத்னா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16.11.2020ம் தேதி வெளியிடப்பட்டதில் மாவட்டத்தில் 2,54,807 ஆண் வாக்காளர்களும், 2,56,813 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,11,627 வாக்காளர்கள் இருந்தனர்.

அதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2021ஐ தகுதி நாளாக கொண்டு கடந்த 16.11.2020 முதல் 15.12.2020 வரையிலான காலத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கத் திருத்தம் 2021ன்போது 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்கள் ஆகியோர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும் மற்றும் வாக்காளர் பட்டியலில் நீக்கம் மற்றும் திருத்தம் செய்திடவும் படிவங்கள் பெறப்பட்டன.
சிறப்பு சுருக்கத் திருத்தம் 2021-ன்போது அரியலூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி வரப்பெற்ற படிவம் 6ல் 10,374 விண்ணப்பங்களில் 10,348 விண்ணப்பங்கள் ஏற்பும், 26 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை கோரி வரப்பெற்ற படிவம் 6யு-ல் விண்ணப்பங்கள் ஏதும் வரப்பெறவில்லை.

படிவம் 7ல் வரப்பெற்ற 926 விண்ணப்பங்களில் 896 விண்ணப்பங்கள் ஏற்பும், 30 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 8ல் வரப்பெற்ற 1,424 விண்ணப்பங்களில் 1,379 விண்ணப்பங்கள் ஏற்பும், 45 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 8யு-ல் வரப்பெற்ற 764 விண்ணப்பங்களில் 759 விண்ணப்பங்கள் ஏற்பும், 5 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஜெயங்கொண்டம் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி வரப்பெற்ற படிவம் 6ல் 9,876 விண்ணப்பங்களில் 9,837 விண்ணப்பங்கள் ஏற்பும், 39 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 7ல் வரப்பெற்ற 912 விண்ணப்பங்களில் 891 விண்ணப்பங்கள் ஏற்பும், 21 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 8ல் வரப்பெற்ற 1,208 விண்ணப்பங்களில் 1,160 விண்ணப்பங்கள் ஏற்பும், 48 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 8யு-ல் வரப்பெற்ற 362 விண்ணப்பங்களில் 360 விண்ணப்பங்கள் ஏற்பும், 2 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2021 தொடர்பாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி ஆகியவற்றிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதின் அடிப்படையில், அரியலூர் தொகுதியில் 1,31,335 ஆண் வாக்காளர்களும், 1,32,670 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,64,012 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,31,663 ஆண் வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,66,013 வாக்காளர்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 2,62,998 ஆண் வாக்காளர்களும், 2,67,017 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,30,025 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார் .இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ.,ஜெய்னுலாப்தீன், ஆர்டிஓக்கள் ஜோதி, பூங்கோதை, ேதர்தல் தாசில்தார் குமரையா மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : voters ,constituencies ,Ariyalur district ,
× RELATED மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில்...