×

ஆண்களை விட பெண்கள் அதிகம் பெரம்பலூர் அருகே அரணாரையில் குட்கா, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்,ஜன.21: பெரம்பலூர் அருகே அரணாரை யில் காவல்துறை சார்பாக குட்கா, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தர வின்பேரில், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பெரம்பலூர், பாடாலூர், மங்கலமேடு, குன்னம், அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர் ஆகிய அனைத்து காவல் நிலையங்கள் சார்பாகவும் அந்தந்த காவல்சரக எல் லைக்கு உட்பட்ட கிராமப் புற பகுதிகளில் குட்கா மற் றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப் பட்டது.இதன்படி பெரம்பலூர் காவல் நிலையம் சார்பாக பெரம்பலூர் நகராட்சி எல் லைக்கு உட்பட்ட அருணா ரை கிராமத்தில் நேற்று குட்கா மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புண ர்வு பேரணி நடத்தப்பட்டது. அரணாரை மாரியம்மன் கோவில் அருகே தொடங் கிய இந்த விழிப்புணர்வு பேரணி, அரணாரை கிரா மத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இறுதி யில் அதே மாரியம்மன் கோயில் அருகிலேயே முடி வடைந்தது. இந்த விழிப்புணர்வுப் பேர ணியில் போலீசாருடன் கிராம முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.அப் போது தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்து வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பொதும க்களுக்கு துண்டு பிரசுர ங்கள் விநியோகிக்கப்பட் டது.

Tags : tobacco eradication awareness rally ,men ,Aranarai ,Perambalur ,women ,
× RELATED பெரம்பலூர் அருகே அரணாரை ஏரியில் மீன்பிடி திருவிழா