×

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்

அரியலூர், ஜன.21: திருமானூர் அருகிலுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கரைவெட்டி பரதூர் கிராமத்தில் 1100 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்திலேயே மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது. இந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயமாக 1998 ல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்னும் அரியலூர் மாவட்ட மக்களில் பலருக்கு கரைவெட்டி பறவைகள் சரணாலயம் இருப்பதே அறியாத நிலை தான் உள்ளது. எனவே அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் வரவழைக்கும் வகையில் வந்து செல்லும் வகையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் அரியலூர் மாவட்ட மக்கள் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படும், மேலும் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்ல உதவிகரமாகவும் இருக்கும். மேலும் பள்ளி மாணவர்கள் வந்து பார்வையிடும் வகையில் கல்விச் சுற்றுலா செல்லும் திட்டத்தில் முதன்மையான முக்கியத்துவம் தரும் வகையில் சுற்றறிக்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக் கல்லூரி நிர்வாகத்திற்கும் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை பார்வையிட தகவல் அனுப்பி மாவட்ட மக்களுக்கு கரைவெட்டி பறவைகள் சரணாலயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Karivetti Bird Sanctuary ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது