வங்கி துணை மேலாளர் தற்கொலை

போடி, ஜன. 21: திண்டுக்கல் மாவட்டம், திம்மலக்குண்டுவை சேர்ந்தவர் வெங்கட்துரை (29). இவர் போடி- தேவாரம் சாலையிலுள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். போடி சுப்புராஜ் நகரில் அறை எடுத்து தங்கியிருந்த இவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையி–்ல் தாய்மாமன் மகளை திருமணம் செய்ய குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

Related Stories:

>