×

சுற்றுலா பயணிகள் கோரிக்கை திருச்சி மண்டல அளவில் பெரம்பலூரில் ஓவிய சிற்ப கண்காட்சி கலைப்படைப்புகளை காட்சி படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு


பெரம்பலூர்,ஜன.21: திருச்சி மண்டல அளவில் பெரம் பலூரில் நடைபெற உள்ள ஓவிய, சிற்பக் கண்காட்சி யில் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்த விருப்பமுள் ளவர்கள் விண்ணப்பிக்க லாம் என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடப் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கலை பண் பாட்டுத்துறையால் சிறந்த ஓவியம், சிறந்த சிற்பக் கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருது வழங்கு தல், மாநில அளவிலான ஓவிய, சிற்பக் கலைக்காட்சி நடத்துதல், தனிநபர், கூட்டுக் கண்காட்சி நடத்திட நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகள் கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நடைபெற்று வருகி றது.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கலைப் பண் பாட்டுத் துறையின் திருச்சி மண்டலத்தின் சார்பில் நட ப்பாண்டின் கண்காட்சி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் பெரம்ப லூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த ஓவிய, சிற்ப கலை ஞர்களின் படைப்புகள் காட் சிப்படுத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில் பங்கு பெற விருப்பமுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்கள் கண் காட்சியில் இடம்பெறும் வகையில் தங்களின் கலைபடைப்புகளின் 6×4 அளவு புகைப்படங்கள் மற்றும் தங் கள் சுயவிவரகுறிப்பினை, மண்டல உதவிஇயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, நைட்சாயில் டெப்போ ரோ டு, மூலத்தோப்பு, ரங்கம் திருச்சிராப்பள்ளி - 620 006 என்ற முகவரிக்கு வரும் 31ம்தேதிக்குள்அனுப்ப வேண்டும். கலைபடைப்புகளில் புகை ப்படங்களின் அடிப்படையி ல் தேர்வுசெய்த ஓவியம், சிற்பம் உரிய கலைஞர்க ளிடம்பெறப்பட்டு கண்காட் சியில் வைக்கப்படும். மே லும் இதுதொடர்பான விவ ரங்களுக்கு கலைபண்பாட் டுத்துறையின் திருச்சிமண் டல அலுவலகத்தை 0431-2434122 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags : exhibition ,Trichy ,Perambalur ,
× RELATED சென்னையின் முதல் பேனா கண்காட்சி!