×

வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு பெரம்பலூர் மாவட்டத்தில் 5,75,986 வாக்காளர்கள்

பெரம்பலூர்,ஜன.21: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளி லும் 5,75,986 வாக்காளர் கள். ஆண் வாக்காளர்களை விட 10,832பெண் வாக்காளர்கள் அதிகமுள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, இறுதி வாக் காளர் பட்டியலை பெரம்ப லூரில் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்றுவெளியிட்டார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது :பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 16ம்தேதி வெளியிட்ட வரைவு வாக் காளர் பட்டியலில் பெரம்ப லூர் (தனி)சட்டமன்றத் தொகுதியில் 2,92,412 வாக்காள ர்களும்,குன்னம் சட்டமன்ற த் தொகுதியில் 2,63,920 வாக்காளர்களும் என மொத் தம் 5,56,332 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் நவ-16ம்தேதி முதல் டிச.15ம்தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திரு த்தப் பணியின் பொது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெற ப்பட்ட படிவங்களின் அடிப் படையில் 20,702 வாக்காளர்கள் பகுதியானவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டைப் பதிவு, இடப் பெயர்ச்சி காரணமாக 1,048 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச் சாவடி மையங்களில் மொத்தம் 3,02,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,47,320 வாக்காளர்களும், பெண்கள் 1,54,950 வாக்காளர்களும், இதர 21 வாக்காளர்களும் உள்ளனர். குன்னம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 2,73,695 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,35,240 வாக்காளர்களும், பெண்கள் 1,38,442 வாக்கா ளர்களும்,இதர 13 வாக்காளர்களும் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 2சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,75,986 வாக் காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,82,560 வாக்காளர்களும், பெண்கள் 2,93,392 வாக்காளர்களும், இதர 34வாக்காளர்களும் உள்ளனர் எனத் தெரிவித் தார்.இதில் ஆண்களை விட பெண்கள் 10832 பேர் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராஜேந்திரன், சப்.கலெக்டர் பத்மஜா, தேர்தல் தாசில்தார் துரைராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக (திமுக) வழக்கறிஞர் செந்தில்நாதன், (அதிமுக) நகரசெயலாளர் ராஜபூபதி ,(காங்கிரஸ்) மாவட்ட தலைவர் சுரேஷ், கம்யூ கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் செல்லதுரை, ஞானசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செய லாளர் காமராசு, தேசியவாத காங்கிரஸ் குணசேகரன், அனைத்து தாசில்தார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : voters ,district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்