×

காளையார்கோவில் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு

காளையார்கோவில், ஜன.21: காளையார்கோவில் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பயணிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். காளையார்கோவில் பஸ் நிலையத்திற்கு சுற்றியுள்ள பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்தும் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்தும் செல்லும் மையப்பகுதியாகும். போதிய மழை இல்லாமல் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பயணிகள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் கடைகளில் வாட்டர் பாக்கெட் மற்றும் தண்ணீர் கேன்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது.

பிளாஸ்டிக் பாக்ெகட் மற்றும் கேன்களை ரோட்டில் விட்டுச் செல்வதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தின் சார்பில் பஸ் நிலைய கட்டிடத்தில் தண்ணீர் டேங்க் அமைத்து குடிநீர் பைப்புகள் அமைக்கப்பட்டு பயணிகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டது. போதுமான பராமரிப்பு இல்லாமல் சில மாதங்களிலே வீணடிக்கப்பட்டு விட்டது.

அதன்பின்பு இன்று வரை பழுதடைந்த பைப்பை சரி செய்யவே இல்லை. இதனால் தற்போது ஏற்பட்டுள்ள தற்போது பயணிகள் குடிநீர் மற்றும் அனைத்து தேவைகளுக்கும் மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் சுகாதாரமான குடிநீர் தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பொதுமக்கள் கூறுகையில், காளையார்கோவில் வளர்ந்த நகரங்களில் ஒன்று. மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள காளையார்கோவில் பஸ் நிலையத்தில் குடிப்பதற்கு மற்றும் மற்ற தேவைகளுக்கு என்று தண்ணீர் வசதி இல்லை. கடைகளில் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. பஸ் நிலையத்திற்கு ஏற்கனவே தண்ணீர் வசதி செய்யப்பட்டு செயல்படாமல் உள்ளது. தண்ணீர் பைப்புகளை சரி செய்தாலே குடிநீர் பிரச்னை குறையும். காளையார்கோலில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு போதுமான அளவிற்கு பஸ் ஸ்டாண்டு இல்லை. சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

Tags : Passengers ,Kaliningrad ,bus station ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...