×

காரைக்குடியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா

காரைக்குடி, ஜன.21: காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோ னா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம் என அரசு தெரிவித்ததை தொடர்ந்து கல்லூரிகள் செயல்பட துவங்கின.

காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள 5 பிரிவுகளில் இறுதியாண்டில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த வாரம் முதல் கல்லூரி திறக்கப்பட்டு செயல்படுகிறது.தங்கி படிக்க மாணவர்களுக்கு 5 விடுதிகளும், மாணவிகளுக்கு 4 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர்.
இந்நிலையில் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று முன்தினம் 148 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த விடுதியில் தங்கி படித்த மாணவி ஒருவருக்கு கொரோனா தெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் 170 மாணவர்களுக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து டாக்டர் ஆன்தராஜ் கூறுகையில், கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எங்கள் மருத்துவ குழுவினர் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அழகப்பா அரசு கலைக்கல்லூரி, பள்ளத்தூரில் உள்ள கல்லூரி என அனைத்து கல்லூரிகளிலும் கடந்த வாரம் முதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் பரிசோதனை செய்ததில் மாணவி ஒருவருக்கு தெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு அறிகுறி எதுவும் இல்லை என தெரிவித்தார். இருப்பினும் உரிய மருந்து அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்றார்.

Tags : Corona ,college student ,Karaikudi ,
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்