கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை

காரைக்கால், ஜன. 21: காரைக்காலில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி துவங்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் 9 இடங்களில் அந்த பணி துவங்கியது. அவற்றில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையும் ஒன்றாகும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 3 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நடந்துள்ளது.

நாளொன்றுக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 28 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாரத்தில் 4 நாட்களுக்கு (திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி) மட்டும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. தடுப்பூசி போட்டு கொண்ட எவருக்கும் இதுவரை எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் இந்த தடுப்பூசி குறித்து அச்சப்பட தேவையில்லை என்று நலவழித்துறை மற்றும் காரைக்கால் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>