×

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை: டெல்லியில் தூதரகம் முன்பு விஸ்வ இந்து பரிஷத் போராட்டம்

டெல்லி: வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்கதேச தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக உள்நாட்டு வன்முறை தீவிரமடைந்துள்ளது. இளம் மாணவர் குழுவின் போராட்ட தலைவரான ஹாபீ என்பவர் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார் . இதற்கு பின்னணியில் இந்தியாவின் கை அங்கு இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் அவரது படுகொலையை கண்டித்து பரவலான கலவரம் நடைபெற்று வருகிறது.

இந்த கலவரத்தின் தொடர்ச்சியாக அங்குள்ள பல சிறுபான்மையினரான இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில் சிறுபான்மை சமூகமான இந்து சமூகத்தை சேர்ந்த தீபு சந்திரதாஸ் என்ற இளைஞர் சில கும்பலால் கொடூரமான நிலையில் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதற்கு இந்தியாவில் உள்ள பல கட்சிகள் கண்டனத்தை தெரிவித்திருக்க கூடிய சூழ்நிலையில் வங்கதேசத்தில் நடைபெற கூடிய இந்துக்கள் மீதான தாக்குதல் மற்றும் தீபு சந்திரதாஸ் படுகொலை ஆகியவற்றை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வங்கதேச தூதரகம் சம்மன் அனுப்பியது குறிப்பாக இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து அச்சத்தை பதிவு செய்வதற்காக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதருக்கு வங்கதேச தூதரகம் இன்று சம்மன் அனுப்பியது வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடைபெற கூடிய தாக்குதலை கண்டித்தும். வங்கதேசத்தில் இந்து சமூகத்தை சேர்ந்த தீபு சந்திரதாஸ் என்ற இளைஞர் சில கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்.

டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அருகே இந்து அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, பஜிரங்தல் அமைப்பு உள்ளிட்ட பல இந்து அமைப்புகள் இந்த படுகொலை மற்றும் தாக்குதலை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை முன்வைத்துள்ளனர். வங்கதேச தூதரகத்தின் சுமார் 1 கிலோ மீட்டருக்கு முன்பே போராட்டக்காரர்கள் முன்னேறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

அப்பகுதியில் ஒன்று திரண்ட ஏராளமான இந்து அமைப்புகள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியும் வங்கதேச அரசு மற்றும் இடைக்கால பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி அவர்கள் முன்னேற முயன்றதால் காவல்துறையினருக்கும், போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்புகளையும் தகர்த்ததால் அங்கு களேபரமான சூழல் காணப்படுகிறது.

 

Tags : Bangladesh ,Viswa ,Hindu Parishad ,Delhi ,Hobby ,
× RELATED ராகுல் வெளிநாடு சென்றுள்ள நிலையில்...