புதிதாக 35,111 பேர் சேர்ப்பு : கலெக்டர் தகவல் 18வயது பூர்த்தியடைந்தவர்களை சேர்த்ததில் கரூர் மாவட்டம் முதலிடம்

கரூர் கலெக்டர் மலர்விழி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு தொகுதிகளிலும் 8லட்சத்து 96ஆயிரத்து 713பேர் உள்ளனர். 2021ஐ தகுதியாக கொண்டு 18வயது பூர்த்தியடைந்த 16637 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி, தமிழகத்திலேயே அதிகளவு 18வயது பூர்த்தியடைந்தவர்களை சேர்த்ததில் கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

Related Stories:

>