×

சிவசைலத்தில் முற்றுகை முயற்சி

கடையம், ஜன. 21:  கடையம்  அருகே சிவசைலம் கிராமத்தில் தொடர் மழையால்  பயிர்கள் சேதமாகின. சேதமான  நெல்  பயிர்  கணக்கு விவரங்களை அரசிற்கு விரைந்து அனுப்ப வேண்டும். தினமும் பல்வேறு சான்றிதழ் வாங்க வசதியாக உரிய நேரத்திற்கு விஏஓ, கிராம அலுவலகத்திற்கு வர வேண்டும். முறையாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசைலத்தில் விஏஓ அலுவலகத்தை மார்க்சிஸ்ட் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.   போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதையடுத்து விவசாய சங்க  ஒன்றியச் செயலாளர் முத்துராஜ், கணேசன், சேகர், ரவி மற்றும் விவசாயிகள், பொது மக்கள்  விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட திரண்டு வந்தனர். தகவலறிந்து வந்த ஆழ்வார்குறிச்சி எஸ்ஐகள் தமிழரசன், சந்திரசேகர். ஆழ்வார்குறிச்சி ஆர்ஐ மனோகர் சமரசப்படுத்தினர். இதில் சேத விவரங்களை விரைந்து  அனுப்பவும், நாள்தோறும் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வந்துசெல்லவும் நடவடிக்கை  எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச்  சென்றனர்.

Tags : siege ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...