தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜன.21: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்  மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(22ம் தேதி) காலை 10.30 மணி அளவில் நடக்கிறது. தூத்துக்குடி ஆசிரியர் காலனி முதல் தெருவிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும், இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பங்கேற்கலாம். மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமிக்கப்படும் போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது எனவும், தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>