விசாரணைக்கு ஆஜராகாத போலீசாருக்கு பிடிவாரண்ட்

மதுரை, ஜன. 21: மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கும், சிலருக்கும் இடையே பணம் கொடுத்ததில் பிரச்னை இருந்துள்ளது. இதனால், கடந்த 2013ல் சிலர் மோகனின் கடைக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். புகாரை விசாரித்த கருப்பாயூரணி போலீசார் கொடுக்கல், வாங்கல் பிரச்னை என புகாரை முடித்துள்ளனர். இது தொடர்பாக மோகன் மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம், புகாரில் தொடர்புடைய போலீசார் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

 இந்த மனு மாஜிஸ்திரேட் முத்துராமன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  புகாரில் கூறப்பட்டுள்ள தொடர்புடைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ ஞானகமலி ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த மாஜிஸ்திரேட் விசாரணையை மார்ச் 31க்கு தள்ளி வைத்தார்.

Related Stories:

>