குளத்தூர் அரசு மருத்துவமனையில் பேவர் பிளாக் அடிக்கல் நாட்டுவிழா சின்னப்பன் எம்எல்ஏ பங்கேற்பு

குளத்தூர், ஜன.21: குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக சின்னப்பன் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5லட்சத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்க டெண்டர் விடப்பட்டது.  இதற்காக அடிக்கல் நாட்டுவிழா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில் சின்னப்பன் எம்எல்ஏ பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் நடராஜன், விளாத்திகுளம் சேர்மன் முனியசக்தி ராமசந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் 14வதுவார்டு ராஜேந்திரன், 15வது வார்டு வைத்தியர் குருநாதன், வட்டார சுகாதார அலுவலர் இன்பராஜா, ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர் செண்பகப்பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் போடுசாமி, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பிச்சைமணி, ஊராட்சி தலைவி மாலதி செல்வப்பாண்டி, கவுன்சிலர் கெங்குராஜன், ஜீவிதா சதீஷ்குமார், சமக கிளை நிர்வாகிகள் கோமதிசங்கரன், பிச்சைராஜ், சம்சுகனி, பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>