சுடுகாட்டில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

மேலூர், ஜன.21: மேலூர் அருகே வெள்ளலூரை சேர்ந்தவர் மந்தையன் மனைவி கண்ணம்மாள்(70). கணவனை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த பொங்கலுக்கு கோட்டநத்தம்பட்டியில் வசிக்கும் இவரது பேத்தி தாரணி(24) இவரை வந்து பார்த்துவிட்டு சென்றார். அப்போது உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட மூதாட்டி கண்ணம்மாள் தான் யாருக்கும் பாரமாக இருக்கவில்லை என பேத்தி தாரணியிடம் கூறி புலம்பினார். இந்நிலையில் நேற்று அப்பகுதி உள்ள சுடுகாட்டிற்கு சென்ற கண்ணம்மாள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீழவளவு எஸ்ஐ சுதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

>