டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டம் அலங்காநல்லூர் அருகே பரபரப்பு

அலங்காநல்லூர், ஜன.21:அலங்காநல்லூர் அருகே பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை அமைக்க முயற்சி மேற்கொள்வதாக தெரிகிறது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் மண்ணெண்ணெய் கேனுடன் சாலைமறியல் போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்த பாலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் கூறுகையில், இந்த பகுதியில் மதுபான கடையை திறக்க விடாமல் தடை செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.

எனவே மதுபானக்கடை திறப்புக்கு எதிராக உரிய உத்தரவு பெறுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>