ஆண் குழந்தை கடத்தல்?

விருத்தாசலம், ஜன. 21: பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இருவருக்கும் 4 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் இரணியன் என்ற ஆண் குழந்தை உள்ளது.  இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. தொடர்ந்து வீடு மற்றும் அருகிலுள்ள இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.

இதையடுத்து பெண்ணாடம் போலீசாருக்கு மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் வந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் குழந்தை விழுந்திருக்கலாம் என கருதி திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த திட்டக்குடி தீயணைப்பு துறையினர், வாய்க்கால் மற்றும் அங்கு உள்ள முட்புதர்களில் தேடினர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அப்பகுதியில் மர்ம நபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக வந்து சென்றது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மர்ம நபர்கள் யாரேனும் தூக்கி சென்று விட்டார்களா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  குழந்தை காணா மல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>