×

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி பேராசிரியர்கள் திடீர் போராட்டம்

சிதம்பரம், ஜன. 21: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வேளாண்மை, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் உள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள் சுமார் 200 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.இதுகுறித்து பலமுறை நிரவாதத்திடம் வலியுறுத்தியும் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்திற்கு வந்தனர்.பின்னர் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவலறிந்த பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவன், போராட்டத்தில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திடீரென பேராசிரியர்களுக்கும், பதிவாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட  முக்கிய நிர்வாகிகளை துணைவேந்தர் டாக்டர் முருகேசன், தனது அறைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவிப் பேராசிரியர்கள், தங்களது பதவி உயர்வு குறித்து கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக துணைவேந்தர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியர்கள் கலைந்து சென்றனர். பதவி உயர்வு கிடைக்காததால் உதவிப் பேராசிரியர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Assistant professors ,sit-in protest ,vice chancellor ,office ,Annamalai University ,
× RELATED வேலூரில் தினகரன் -விஐடி இணைந்து...