மழைக்கு மீண்டும் முளைத்த சோளம் திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் மனு கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல், ஜன. 21: ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு இருந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த தொடர்மழையால் இப்பகுதி விவசாயிகள் மக்காச்சோள பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து விட்டது.  மேலும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் மீண்டும் முளைத்து விட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மழையால் முளைத்த மக்காச்சோளத்துடன் வந்து, நேற்று திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் இழப்பீடு கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை உடனே கணக்கெடுத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தாசில்தாரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>