×

வேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் பூங்கா வசதியுடன் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம்

நாகர்கோவில், ஜன. 21:  நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷனில் பூங்கா வசதியுடன் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர் நேற்று திறந்துவைத்தார்.  நாகர்கோவில் மாநகர பகுதியில் காலை, மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. தற்போது மாநகர பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதின்விளைவாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி தற்போது குறைந்துவருகிறது. இருப்பினும் விழா காலங்கள், பண்டிகைகாலங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் வர்த்தக நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் சாலையோரம் கண்டபடி நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.   இதனை சரிசெய்யும் வகையில் மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது எஸ்பி அலுவலக சாலையின் ஒருபகுதி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, வேப்பமூடு ஜங்ஷன், அலெச்சாண்டிரா பிரஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் நாகர்கோவில் நாகராஜா திடல் பகுதியில் கார் மற்றும் சுற்றுலா வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் வேப்பமூடு பூங்கா முன்பு போக்குவரத்து ஊழியர்களின் மருத்துவமனை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால், அந்த இடம் காலியாக இருந்தது. அந்த இடத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக தனியார் பங்களிப்புடன் அந்த இடத்தில் பூங்காவுடன் கூடிய இருசக்கர பார்கிங் வசதி செய்யப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ேபாக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். அருகுவிளையில் ஆணையர் ஆய்வு நாகர்கோவில்  மாநகர பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்குகிறார்களா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று காலை மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் அருகுவிளை பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து வழங்குகிறார்களா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் செல்லும் கழிவுநீரோடையில் கழிவுநீர் தேங்காமல் செல்கிறதா எனவும், கழிவுநீர் ஓடையின் மீது போடப்பட்டுள்ள காங்கிரீட் சிலாப்புகள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

Tags : Bicycle parking facility ,park facility ,area ,Veppamoodu Junction ,
× RELATED வாட்டி வதைக்கும்...