2 கட்டமாக மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகர்கோவில், ஜன.21: குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஆரோக்கியபுரம் முதல் பெரியகாடு வரையுள்ள மீனவர்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு மீனவர்களுக்கு முதற்கட்டமாகவும் பின்னர் பகல் 11.30 மணி முதல் 1.30 மணி வரை ராஜாக்கமங்கலம் துறை முதல் நீரோடி வரை உள்ள மீனவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.  எனவே மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட்ட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை 22ம் தேதி அன்று நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். 22ம் தேதி அன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>