×

மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் விலக்கு பழநி நகராட்சி அறிவிப்பு

பழநி, ஜன. 21: மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் விலக்கு அளிக்க வேண்டுமென பழநி நகராட்சி அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கார், வேன், சுற்றுலா பஸ் போன்றவைகளில் அதிகளவு வருகின்றனர். இதுபோன்ற வாகனங்களுக்கு பழநி நகராட்சி சார்பில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வாகனங்ளுக்கு சுங்கக் கட்டண வசூலில் விலக்கு அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பழநி நகராட்சி ஆணையர் லட்சுமணன் விடுத்துள்ள சுற்றறிக்கை: பழநி நகருக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வாகனங்களுக்கு எப்போதுமே வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளிடம் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை சான்றுகளை சரிபார்த்து விலக்கு அளித்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Palani Municipality ,
× RELATED குடிநீரை கொதிக்க வைத்து உபயோகிக்க வேண்டும்: பழநி நகராட்சி அறிவிப்பு