×

இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார் குமரி மாவட்டத்தில் 15.67 லட்சம் வாக்காளர்கள் 54,518 பேர் புதிதாக சேர்ப்பு

நாகர்கோவில், ஜன.21: குமரி மாவட்டத்தில் 54 ஆயிரத்து 518 பேர் புதியதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 பேர் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.தமிழ்நாடு முழுவதும்  நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியில் 282839, நாகர்கோவிலில் 261658, குளச்சலில் 259482, பத்மநாபபுரம் 231378, விளவங்கோடு 244930, கிள்ளியூர் 244930 என்று ஆண்கள் 763148, பெண்கள் 757598, இதரர் 189 என்று மொத்தம் 15 லட்சத்து 20 ஆயிரத்து 935 பேர் இடம்பெற்றிருந்தனர்.அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டு இறந்த, இடம்பெயர்ந்த மற்றும் இரட்டை பதிவுடைய வாக்காளர்களை கண்டறிந்து நீக்கம் செய்யப்பட்டது.அதன்படி கன்னியாகுமரியில் 1681, நாகர்கோவில் 1434, குளச்சல் 1463, பத்மநாபபுரம் 1597, விளவங்கோடு 261, கிள்ளியூர் 1390 என்று மொத்தம் 7826 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரியில் 11275, நாகர்கோவில் 9170, குளச்சல் 9226, பத்மநாபபுரம் 8509, விளவங்கோடு 7108, கிள்ளியூர் 9230 என்று ஆண்கள் 23903, பெண் 30597, இதரர் 18 என 54518 பேர் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் மொத்தம் 7,82,936 ஆண், 7,84,488 பெண், இதரர் 203 என்று மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 பேர் கொண்ட வாக்காளர் இறுதி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் நேற்று வெளியிட்டார்.   குமரி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சப் கலெக்டர் ஷரண்யா அறி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, நாகர்கோவில் ஆர்டிஒ மயில் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் திமுக சார்பில் லீனஸ்ராஜ், வர்க்கீஸ், காங்கிரஸ் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன், பால்ராஜ், அதிமுக சார்பில் ஜெயகோபால், பாஜ சார்பில் ஜெகதீசன், தேமுதிக சார்பில் செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இசக்கிமுத்து, தேசியவாத காங்கிரஸ் சார்பில் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குமரியில் 6 தொகுதிகளில் வாக்காளர்கள் விபரம்
தொகுதி     ஆண் வாக்காளர்    பெண் வாக்காளர்    இதரர்    மொத்தம்
கன்னியாகுமரி    144982    147347    104     292433
நாகர்கோவில்     133014    136369     11      269394
குளச்சல்    135860    131371    14     267245
பத்மநாபபுரம்    120362    117900    28     238290
விளவங்கோடு    121339    126129    27     247495
கிள்ளியூர்    127379    125372    19     252770
மொத்தம்    782936    784488    203    1567627
‘நீக்கப்பட்டவரில் இறந்தவர்கள் அதிகம்’
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 64,936 படிவம் வாங்கப்பட்டது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டு இறந்த, இடம்பெயர்ந்த மற்றும் இரட்டை பதிவுடைய வாக்காளர்களை கண்டறிந்து நீக்கம் செய்யப்பட்டது. படிவம்-7ல் 8,008 படிவம் பெறப்பட்டு அதிலிருந்து 7,826 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தேர்தல் நடவடிக்கைகள் மார்ச் மாதம் முதல் வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் இதுவரை பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டவர்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம். அவர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்றால் உடனே பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் என்பது வாய்ப்பு இல்லை. 01.01.2021 அன்று 18 வயது பூர்த்தி செய்யும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மையங்களில் தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். மேற்படி இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...