×

நத்தம் அருகே வாக்களிக்க 4 கிமீ நடந்து செல்லும் அவலம் அருகிலே மையம் அமைக்ககோரிக்கை

நத்தம், ஜன. 21: நத்தம் அருகே வாக்களிக்க 4 கிமீ நடந்து செல்ல வேண்டியுள்ளதால் அருகிலே வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் அருகே செந்துறை ஊராட்சிக்குட்பட்டது கோவில்பட்டி கிராமம். இதன் உள்வட்டத்தில் முதுமலை, ஒதுக்குகாடு, அண்ணாநகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 700க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ரெங்கையசேர்வகாரன்பட்டி, பெரியூர்பட்டி, மாமரத்துபட்டி, மேட்டுப்பட்டி, செந்துறை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களித்து வருகின்றர்.

இந்த மையங்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 4 கிமீ தூரம் உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது 4 கிமீ நடந்து சென்று வாக்களிக்கும் அவலநிலை உள்ளது. அருகிலேயே வாக்குச்சாவடி மையத்தை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அருகிலுள்ள மல்லநாயக்கன்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைத்து தர வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவிப்பு செய்து செந்துறையில் பேனர் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும் மனு அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

Tags : center ,Natham ,
× RELATED தொழில் மையத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு