திண்டுக்கல்லில் புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

திண்டுக்கல், ஜன. 21: திண்டுக்கல் நகர் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சந்திரமோகன், செல்லத்துரை, மோகனரங்கம், ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பழநி ரோடு, பஸ்ஸ்டாண்ட், தாலுகா ஆபீஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 142 கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில் 22 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 75 கிலோ, 5 கடைகளில் புகையிலை, பாக்குகள் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பை விற்ற கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், புகையிலை விற்ற கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், ‘இந்த சோதனை தொடர்ந்து நடக்கும். வரும் 28ம் தேதி சைப்பூசத்தையொட்டி அனைத்து இடங்களிலும் அன்னதானம் நடப்பது வழக்கம். இதற்கு உணவு பாதுகாப்பு துறையில் முறையான அனுமதி வாங்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>