×

பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

இடைப்பாடி, டிச. 22: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 14000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் தண்ணீர் செல்கிறது. விசைப்படகு போக்குவரத்தும் நடந்து வருகிறது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி, வெளி மாவட்ட பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள், அதிகளவில் வருகை புரிந்து பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டையில் விசைப்படகில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர். விசைப்படகு படித்துறையில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்பி படங்கள் எடுத்துக்கொண்டனர்.

மேலும் இங்கு உள்ள படித்துறை மற்றும் கைலாசநாதர் கோயில் மூல பாறை பெருமாள் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், கோயில்பாளையம் பெருமாள் கோயில், கதவணைப்பாலம் வயல்வெளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இங்குள்ள கடைகளில் மீன்களையும் ருசித்து சாப்பிட்டனர். பூலாம்பட்டி பேரூராட்சி பில்லுக்குறிச்சி கிழக்கு கால்வாயில் 400கன அடி தண்ணீர் செல்வதால், இப்பகுதியில் வெளி மாவட்டத்தை சுற்றியுள்ள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Poolambatti ,Idappadi ,Mettur Dam ,Delta ,Poolambatti Nerinchipettai Hydropower Dam ,
× RELATED கார் மீது அரசு பஸ் மோதி விபத்து