×

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போனது ஐ.பெரியசாமி எம்எல்ஏ பேச்சு

சின்னாளபட்டி, ஜன. 21: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கசவனம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குரும்பபட்டியை சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜ, நாம்தமிழர் கட்சிகளை சேர்ந்த 75 இளைஞர்கள் அந்த கட்சிகளிலிருந்து விலகி 4வது வார்டு உறுப்பினர் சிவமுத்து தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ கூறுகையில், ‘கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

சாதாரண பியூன் வேலைக்கு கூட ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலநிலை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தமிழக அரசு, தமிழக இளைஞர்களை புறக்கணித்து வருகிறது. இதனால் படித்த கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலை மாற இளைஞர்கள் திமுகவிற்கு வாக்களித்தால் மட்டும்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என்றார். இதில் நிர்வாகிகள் பிரபு, சுபாஷ், அஜித், முத்து, முருகேசன், செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : I. Periyasamy MLA ,rule ,AIADMK ,
× RELATED ரஃபேல் விமானம் முதல் தேர்தல்...