கொடைக்கானலில் கள்ளக்காதலி தற்கொலை

கொடைக்கானல், ஜன. 21: கேரளாவை சேர்ந்த சுபிஸ் என்பவர் கொடைக்கானல் தனியார் ஓட்டலில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மேரி (24) பணியாற்றி வந்தார். சுபஸ்க்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் கேரளாவில் உள்ளது. எனினும் கடந்த 2 ஆண்டுகளாக சுபிசும், மேரியும் நாயுடுபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கொரோனா பரவலால் கொடைக்கானலில் பல மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.

இதனால் மசாஜ் சென்டரில் போதிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இதுதொடர்பாக சுபிசுக்கும், மேரிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்து காணப்பட்ட மேரி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சுபிஸ் தகவல் கொடுக்க மேரியின் பெற்றோர் கொடைக்கானல் வந்தனர். இதுகுறித்து மேயின் தாய் அந்தோணியம்மாள் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து சுபிக்சிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>