ஒட்டன்சத்திரத்தில் நீர்த்தேக்க தொட்டிக்கு பூமி பூஜை அர.சக்கரபாணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஒட்டன்சத்திரம், ஜன. 21: ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம், தேவத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதி ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் தரைநிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடந்தது. திமுக மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ கலந்து கொண்டு பூமிபூஜையை துவக்கி வைத்தார். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா, துணை தலைவர் தங்கம், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் சுதா, துணை தலைவர் பாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: