சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

பந்தலூர்,ஜன.21: பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் அரசு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகளை  அறிவித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைப்பெற்று  வருகின்றது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்தும் அதிலிருந்து பாதுகாப்பது குறித்தும், முககவசம் அணிவது,அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில், தேவாலா அரசு துணை சுகாதார நிலைய மருத்துவர் பிரதீப்பாண்டியன், சுகாதார ஆய்வாலர் சேகர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்.

Related Stories:

>