சிறுவாணி சாலையில் சிவ பக்தர்கள் மறியல்

தொண்டாமுத்தூர், ஜன.21: சென்னை புத்தகரம் யோகா குடில் சிவக்குமார் யு டியூப்பில் திருவாசகம், திருசிற்றம்பலம், உழவார பணிகள் குறித்து தரக்குறைவாக பேசியதை கண்டித்து கோவை மாவட்ட கொங்கு நாட்டு ஓதுவார் மூர்த்திகள், சிவனடியார்கள் திருக்கூட்டம், சிவபக்தர்கள் பேரவையினர் நேற்று சிறுவாணி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், கங்காதர தேசிக ஓதுவார், சிவபக்தர்கள் பேரவை பேரூர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மறியலில் பங்கேற்றதோடு சிவக்குமாரை உடனடியாக கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடவள்ளி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சென்னை காவல்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

Related Stories:

>